சாந்தனின் சகோதரன் உருக்கமான கோரிக்கை!

29 மாசி 2024 வியாழன் 05:05 | பார்வைகள் : 8604
தமது தாயாரின் நிலை எந்த தாயிற்கும் ஏற்படக் கூடாது என சாந்தனின் சகோதரன் மதிசுதா தமது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த தமது மூத்த சகோதரன் சாந்தனின் மரண செய்தியை தாயாருக்கு தெரிவிப்பதற்கு தமக்கு குறைந்தது இரண்டு நாட்கள் தேவைப்படுவதாகவும், தாயின் மனநிலை குறித்து உருக்கம் வெளியியிட்டுள்ளார்.
மேலும் தமது வீட்டிற்கு வருபவர்கள் இரண்டு நாட்கள் கழித்துவருமாறும் வினையமுடன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
தாயாரைத் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும், தாயார் அதிர்ச்சி கொள்வதை தவிர்க்கும் வகையில் மரண செய்தியினை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.
சாந்தனின் சகோதரனின் பதிவினால் தமிழின உணர்வாளர்கள் மேலும் வேதனை அடைந்துள்ளனர்.