ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வேலை நிறுத்தம்: விமான பயணிகள் பாதிப்பு
25 மாசி 2024 ஞாயிறு 12:00 | பார்வைகள் : 8627
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் அடிக்கடி தாமதம் மற்றும் இரத்துச் செய்யப்படுவதால், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் தூசண வார்த்தை பிரயோகங்களை சகித்துக்கொள்ள முடியாமல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை உடனடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜனக்க விஜயபத்திரண தெரிவித்தார்.
“அதிக எடையுடன் வண்டியை ஏற்றினால், மாடு வண்டியை இழுக்க முடியாமல் மாடு இறந்துவிடும்” என்பது போன்ற நிலை உள்ளது என்றார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் பாரியளவு பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், தற்போது அனுபவமுள்ள முதிர்ச்சியடைந்த பெருமளவிலான பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்களில் இணைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, அனுபவமும் முதிர்ச்சியுமான ஊழியர்களை இலங்கைக்கு ஆட்சேர்ப்பு செய்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான தற்போதைய விமானங்களுக்கு ஏற்றவாறு புதிய விமான அட்டவணையை தயார் செய்யுமாறு தமது தொழிற்சங்கம் அவசரமாக கோருவதாக ஜனக விஜயபத்திரத்ன தெரிவித்தார். விமானம் ரத்து மற்றும் தாமதம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இந்த நிலைமை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் நாட்டின் பெருமை மற்றும் நற்பெயரை மோசமாக பாதிக்கும் என்றும் ஜனக விஜயபதிரத்ன கூறினார்.
இந்த அவசர வேலைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை காலை 04.30 மணியளவில் ஆரம்பமானது, இதன் விளைவாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னை, இந்தியாவின் ஹைதராபாத், பங்களாதேஷின் டாக்கா மற்றும் மலேசியாவின் கோலாலம்பூர் செல்லும் விமானங்கள் சற்று தாமதமாகின.
இந்த உடனடி வேலைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை காலை 06.30 மணியளவில் முடிவடைந்தது, இதன் விளைவாக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
இந்த விடயங்கள் தொடர்பில் திங்கட்கிழமை (26) கலந்துரையாடுவதற்கு இலங்கை நிர்வாகம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாகவும் ஜனக விஜயபதிரத்ன தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று ஏற்பட்ட விமான தாமதம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையினாலும் இது ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தாமதத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அனைத்து பயணிகளிடமும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மன்னிப்பு கோருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாத வகையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan