Paristamil Navigation Paristamil advert login

சேவலும் தங்க நகையும்

சேவலும் தங்க நகையும்

24 மாசி 2024 சனி 10:02 | பார்வைகள் : 4429


ஒரு தோட்டத்துல இருக்குற வீட்டுல ஒரு சேவல் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு

அது தினமும் தோட்டத்துல மேஞ்சு உணவு தேடி சாப்பிடும் ,அப்படி சாப்புடுறப்ப ஒருநாள் தன்னோட எஜமானாரோட தங்க கம்மல் கீழ கிடக்குறத பார்த்துச்சு

உடனே அத எடுத்து எஜமானர்கிட்ட கொடுக்க போச்சு ,அத பார்த்த பக்கத்து வீட்டு பூன சொல்லுச்சு,

இது விலை உயர்ந்த பொருள் இத நீ யாரு கிட்ட கொடுத்தாலும் நிறய பொன்னும் பொருளும் கொடுப்பாங்கனு சொல்லுச்சு

அதுக்கு அந்த சேவல் சொல்லுச்சு ,உன்னமாதிரி என்ன மாதிரி வீட்டு விலங்குகளுக்கு ஒரு முந்திரி கொட்டையும் இந்த தங்க கம்மலும் ஒண்ணுதான்

இத வச்சி நாம் பெரும பட்டுக்கலாமே தவிர இத வச்சி ஒரு பிடி அரிசி கூட நம்மளால வாங்க முடியாது

அதனால நமக்கு தினமும் சாப்பாடு கொடுக்குற எஜமானர்களுக்கு நேர்மையா நடந்துக்கலாம்னு சொல்லி

எஜமானர் கிட்ட கொண்டுபோய் அந்த தங்க கம்மல போட்டுச்சு

தன்னோட கம்மல் திரும்ப கிடைச்ச சந்தோஷத்துல அந்த சேவலுக்கு நிறய சாப்பிடும் ,தங்குறதுக்கு குட்டியா ஒரு வீடும் செஞ்சு கொடுத்தாங்க அவுங்க

நேர்மைக்கு விலைமதிப்பு கிடையாது

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்