செனேகலின் புதிய ஜனாதிபதிக்கு இம்மானுவல் மக்ரோன் வாழ்த்து!!

26 பங்குனி 2024 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 13860
மேற்கு ஆபிரிக்க நாடான செனேகலின் புதிய ஜனாதிபதியாக Bassirou Diomaye Faye தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
“செனகல் குடியரசின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட Bassirou Diomaye Fayeக்கு வாழ்த்துகள். அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள் மற்றும் அவருடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.
செனேகலின் புதிய ஜனாதிபதியாக Bassirou Diomaye Faye ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார். விரைவில் அவர் பதவியேற்க உள்ளார். நேற்று திங்கட்கிழமை அவர் தனது 44 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடினார். செனேகலில் 18 மில்லியன் மக்கள் வசிக்கிறமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜனாதிபதியாக இருக்கும் Macky Sall, புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025