பரிஸ் : உணவு பரிமாற்றக்காரர்கள் கலந்துகொண்ட மரதோன்!
25 பங்குனி 2024 திங்கள் 09:00 | பார்வைகள் : 12017
உணவு பரிமாற்றக்காரர்கள் (serveuses மற்றும் serveurs) தலைநகர் பரிசில் மரதோன் போட்டி ( la course des cafés) ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். நேற்று மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை இந்த பேரணி 13 வருடங்களின் பின்னர் இடம்பெற்றது.
உணவகங்களில் உணவு பரிமாற்றத்தில் ஈடுபடும் இவர்கள் தங்களது இருப்பை தெரிவிப்பற்காக அவர்களது சீருடையான வெள்ளை நிற சேர்ட் மற்றும் கறுப்பு நிற ஜீன்ஸ், ஏப்ரோன் அணிந்து அவர்கள் இரண்டு கிலோமீற்றர் தூரம் வரையான தூரம் இந்த மரதோனில் கலந்துகொண்டனர். உணவினை எடுத்துச் செல்லும் தட்டும், அதில் உணவு வகைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றனர். ஒற்றைக் கையில் எடுத்துச் செல்லும் இந்த உணவு மற்றும் தண்ணீர் தாங்கிய தட்டினை கீழே விழுத்திவிடாது தங்களது மரதோனை நிறைவு செய்யவேண்டும்.
கிட்டத்தட்ட 300 பேர் வரை அதில் கலந்துகொண்டனர். பரிஸ் நகரசபைக் கட்டிடத்துக்கு முன்பாக ஆரம்பித்து இரண்டு கிலோமீற்றர் சுற்றி மீண்டும் அங்கேயே வந்து நிறைவு செய்தனர்.
பரிஸ் நகரமுதல்வர் ஆன் இதால்கோவும் இதில் பங்கேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan