பரிஸ் : வீதியில் சென்ற வாகனத்தை வழிமறித்து கொள்ளை!
24 பங்குனி 2024 ஞாயிறு 10:38 | பார்வைகள் : 12831
சுற்றுவட்ட வீதி (périphérique) இல் பயணித்த கனரக வாகனம் ஒன்றை வழிமறித்து, அதில் பயணித்த சாரதியை தாக்கி கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணி அளவில் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Porte de Clignancourt பகுதியில் இருந்து சுற்றுவட்ட வீதிக்குள் நுழைய முற்பட்ட கனரகவாகம் ஒன்றை, சாம்பல் நிற டொயோட்டா மகிழுந்து ஒன்று வழிமறித்தது. அதில் இருந்து முகக்கவசம் அணிந்த ஐவர் கொண்ட குழு இறங்கியது. பின்னர் அவர்கள், கனரக வாகனத்தினை நெருங்கி, அதன் சாரதியை வெளியே இழுத்தனர். அவரைத் தாக்கினர். தூக்கி வீசினர்.
பின்னர் வாகனத்துக்குள் ஏறி, அங்கிருந்த பொருட்களை, பணத்தை கொள்ளையிட்டனர். பின்னர் சாரதியை அங்கேயே விட்டுவிட்டு மகிழுந்தில் ஏறி தப்பிச் சென்றனர்.
மயக்கமடைந்த சாரதி ஒருமணிநேரம் கழித்து மயக்கத்தில் இருந்து எழுந்து, காவல்துறையினரை அழைத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வருகை தந்த தீயணைப்பு படையினர், தலையில் காயமடைந்து இரத்தம் வழிந்த நிலையில் சாரதியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan