பரிஸ் : குடும்ப வன்முறையில் - பெண் ஒருவர் கொலை!!
22 பங்குனி 2024 வெள்ளி 21:00 | பார்வைகள் : 11660
கத்திக்குத்துக்கு இலக்காகி பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.
பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இன்று மார்ச் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. place de la République அருகே boulevard Voltaire கட்டிடத்தொகுதியில் இருந்து இச்சடலம் மீட்கப்பட்டது. காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பெண் ஒருவர் குறைந்தது மூன்று தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்த நிலையில், சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
அதே வீட்டில் இருந்த அப்பெண்ணின் முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டார். அவர்களுக்கு 3 வயதில் பெண் பிள்ளை ஒருவர் இருப்பதாகவும், அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan