73 வயது நபருக்கு 14 ஆண்டுகள் சிறை!
20 பங்குனி 2024 புதன் 12:53 | பார்வைகள் : 12546
துப்பாக்கியால் சுட்டு பக்கத்துவீட்டுக்காரரை கொலை செய்த குற்றத்துக்காக 73 வயதுடைய ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Hauts-de-Seine மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இந்த தண்டனையை விதித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு குறித்த நபர் தனது பக்கத்துவீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவர் அதிகளது சத்தம் எழுப்பியதாகவும், அது தொந்தரவாக இருந்ததாகவும் தெரிவித்து, இச்செயலில் ஈடுபட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
மார்ச் 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அவரது வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம், நேற்று அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்துக்கு அவர் தனது சக்கரநாற்காலியில் வருகை தந்திருந்தார்.


























Bons Plans
Annuaire
Scan