இன்று ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்!

19 பங்குனி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 16881
இன்று மார்ச் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆசிரியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். கல்விச் செயற்பாடுகள் தடைப்பட உள்ளன.
ஊதிய அதிகரிப்பு கோரி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அவர்களில் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஆசிரியர் தொழில் பாரபட்சம் காட்டப்படுகிறது என அவர்கள் குற்றம்சாட்டி, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வேலை நிறுத்தத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
FSU, UNSA Education, SGEN-CFDT, Sud Education மற்றும் CGT Educ'action ஆகிய ஆசிரியர் தொழிற்சங்கள் தங்களது ஊழியர்களை வேலை நிறுத்தத்துக்கு அழைத்துள்ளன.
அதேவேளை, இன்று பிற்பகலின் போது நாடு முழுவதும் 200 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.
பரிசில் பிற்பகல் 2 மணி அளவில் Jardin du Luxembourg பகுதியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
பரிசில் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதியின் பின்னர் இடம்பெறும் மிகப்பெரிய அளவிலான வேலை நிறுத்த போராட்டம் இதுவாகும்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025