Essonne : வீட்டுக்குள் கமரா பொருத்தி - கணவரை கையும்களவுமாக பிடித்த பெண்!!
24 பங்குனி 2024 ஞாயிறு 02:51 | பார்வைகள் : 14268
Athis-Mons (Essonne) நகரில் வசிக்கும் பெண் ஒருவர், தமது பூனை அவ்வப்போது காயமடைவது தொடர்பில் கவலையுற்று வந்தார். அதன் மர்மத்தை கண்டறிய வீட்டுக்குள் ரகசிய கமரா ஒன்றை பொருத்தியுள்ளார்.
குறித்த பெண் வளர்த்த பூனை ஒன்று கடந்த 2022 ஆம் ஆண்டு உயிரிழந்திருந்தது. அதன் கவலையை மறக்க குறித்த பெண் நான்கு பூனைகளை வாங்கு வளர்த்து வந்துள்ளார். அவர் வேலைக்குச் செல்லும் போது அவருடைய 25 வயதுடைய கணவர் பூனைகளை பராமரிப்பார். ஆனால் வேலையில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் போது பூனை காயமடைந்திருப்பதையும், அச்சமடைந்து நடுங்குவதையும் கவனித்துள்ளார்.
இது தொடர்பில் கணவரிடம் விசாரித்தால் அவர், தமக்கு தெரியவில்லை எனவும், பூனை மேசையில் இருந்து விழுந்து காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இச்சம்பவங்களை அடுத்து, கணவருக்கு தெரியாமல் வீட்டில் கமரா பொருத்து நடப்பவற்றை கண்காணித்துள்ளார்.
அதன்போது அந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது.
குறித்த பூனைகளை அப்பெண்ணின் கணவர் துன்புறுத்தல் செய்துள்ளார். பூனைகளை அடிப்பதும், தூக்கி வீசுவதும், கதிரைகளுக்கு கீழே வைத்து நசுக்குவதும் என பல விதங்களில் துன்புறுத்தியுள்ளார்.
அதனை அடுத்து அப்பெண் காவல்துறையினரை அழைத்துள்ளார். கணவர் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டதால் அவருக்கு Evry நீதிமன்றம் ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதேவேளை, அவர் தனது வீட்டில் விலங்குகள் வளர்ப்பதற்கும் ஐந்து ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan