இலங்கையில் வெப்பமான வானிலையால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
16 பங்குனி 2024 சனி 12:50 | பார்வைகள் : 7699
இலங்கையில் அனைத்து மாவட்டங்கலும் வெப்பமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குருநாகல், இரத்தினபுரி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று கடும் வெப்பமான வானலை காணப்பட்டது.
கடும் வெப்பமான வானிலையுடன் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சூரிய ஒளி நேரடியாக தோலின் மீது படுவதால் சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும், இதன்போது தோலில் எரிகாயங்கள் ஏற்படலாம்.
தோலில் வெள்ளைப் புள்ளிகள் இருப்பது, தோல் அரிப்பு, வியர்வையால் சீழ் கொப்புளங்கள், வியர்வை தேங்கி மார்பகங்களில் உருண்டை வடிவ பூஞ்சை போன்றவை இந்த தொற்று நிலைகளாக அடையாளம் காணப்படுகின்றன.
மேலும், தற்போது காணப்படும் தோல் ஒவ்வாமை வெப்பமான வானிலை காரணமாக அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக சிறு பிள்ளைகள் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இது குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவது கட்டாயம் என்றும் தோல் நோய் நிபுணர் வைத்தியர் இந்திரா கஹவிட்ட தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan