சுவிஸில் ஆடையின்றி நடமாடிய நபரால் பரபரப்பு

12 பங்குனி 2024 செவ்வாய் 15:54 | பார்வைகள் : 10319
சுவிஸ் நகரமொன்றில், ஆடையின்றி, கையில் கத்தியுடன் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடமாடிய ஒருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்திலுள்ள Wollishofen என்னுமிடத்தில், ஆடையின்றி உலாவந்துள்ளார்.
கையில் கத்தியுடன் பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள் அவர் நுழைய, மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், அந்த நபரிடம் கத்தியைக் கீழே போடுமாறு கூறியும் அவர் கத்தியைக் கீழே போடவில்லை.
அவர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்தும் அவர் கட்டுக்குள் வரவில்லை. எனவே டேஸர் மூலம் அவரைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள் பொலிசார்.
அவர் போதைப்பொருட்களின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தோன்றுவதாக பொலிசார் கூறியுள்ளார்கள்.
சமீபத்தில் யூதர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் உஷார் நிலையில் காணப்படும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததையடுத்து, அப்பகுதியில் பரபரப்பு உருவானது குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025