’பிரான்சின் பெருமை!’ - ஒஸ்கார் விருதுபெற்ற பிரெஞ்சு பெண் இயக்குனருக்கு ஜனாதிபதி வாழ்த்து!!
11 பங்குனி 2024 திங்கள் 16:24 | பார்வைகள் : 17057
நேற்று இரவு இடம்பெற்ற ஒஸ்கார் விருது விழாவில் பிரான்ஸ் சார்பாக போட்டியிட்ட Anatomie d'une chute திரைப்படம் ’சிறந்த திரைக்கதை’ பிரிவு விருதினை பெற்றுக்கொண்டது.
இந்த திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருந்த பெண் இயக்குனர் Justine Triet இற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் தனது வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்துள்ளார்.
’Justine Triet மற்றும் அவரது குழுவுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் பிரான்சின் பெருமை’ என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த Anatomie d'une chute திரைப்படம் Palme d'Or விருதுகள் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan