கனடாவில் பியர் உற்பத்திக்கா வரி தொடர்பில் வெளியாகிய தகவல்
10 பங்குனி 2024 ஞாயிறு 08:42 | பார்வைகள் : 8435
கனடாவில் பியர் உற்பத்திகளுக்கு மீதான வரி அதிகரிப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பியர் உற்பத்தி மீது அடுத்த மாதம் வரி அதிகரிப்பு அறிவிக்கப்படவிருந்தது.
4.7 வீத வரி அதிகரிப்பு அமுல்படுத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை கருத்திற் கொண்டு பியர் உற்பத்தி வரியை தொடர்ந்தும் 2 வீதமாக பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பியர் உற்பத்தி மீதான வரி அதரிகரிக்கப்படாது என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த பியர் உற்பத்தி வரி அறிமுகம் செய்யப்பட்டது.
வரி அதிகரிப்பு ரத்து காரணமாக உற்பத்தியாளர்களைப் போன்றே நுகர்வோருக்கு நலன்கள் கிட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan