92 வயதில் 5வது திருமணம் செய்யும் பிரபல தொழிலதிபர்...!

8 பங்குனி 2024 வெள்ளி 14:47 | பார்வைகள் : 9089
அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்த 92 வயதான ரூபர்ட் முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில், ரூபர்ட் முர்டோக் தனது நீண்ட நாள் காதலியான 67 வயதான எலெனா ஜுகோவாவை திருமணம் செய்து கொள்வதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
எலெனா ஜுகோவா ஒரு ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார்.
முர்டோக்கும் அவரது காதலிக்கும் இடையே ஆன வயது வித்தியாசம் 25 வருடங்கள் ஆகும்.
குறித்த திருமணத்தை கலிபோர்னியாவில் உள்ள தனது பங்களாவில் நிகழ்த்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது ரூபர்ட் முர்டோக் உடைய 5 வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.