ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களுக்கு தேசிய அஞ்சலி!

5 மாசி 2024 திங்கள் 16:58 | பார்வைகள் : 7668
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களுக்கான தேசிய அஞ்சலி பரிசில் இடம்பெற உள்ளது.
பெப்ரவரி 7 ஆம் திகதி, புதன்கிழமை இந்த அஞ்சலி நிகழ்வு பரிசில் இடம்பெற உள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் உறவினர்கள் பங்கேற்பார்கள் என அறிய முடிகிறது.
சென்ற ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில், பல வெளிநாட்டவர்களுடன் பல இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டிருந்தனர். 42 பிரெஞ்சு மக்களும் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Invalides பகுதியில் புதன்கிழமை முற்பகல் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெறும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025