SUV வாகனங்களுக்கு மூன்று மடங்கு தரிப்பிடக் கட்டணம்! - வாக்களித்த மக்கள்!!
5 மாசி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 11851
SUV வாகனங்களுக்கு தரிப்பிடக்கட்டணம் அதிகரிப்பதா வேண்டாமா எனும் வாக்கெடுப்பு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தமை அறிந்ததே. அந்த வாக்கெடுப்பில் 55% சதவீதமானவர்கள் இந்த கட்டண அதிகரிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வாக்கெடுப்பை அடுத்து, SUV உரிமையாளர்கள் விரைவில் ஒருமணிநேரத்துக்கு €18 யூரோக்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். பரிசுக்கு மட்டும் இந்த தொகை அறவிடப்படும். ஏனைய மாவட்டங்களுக்கு €12 யூரோக்கள் கட்டணம் அறவிடப்படும்.
1.8 தொன் எடைகொண்ட இந்த வாகனங்கள் இடத்தையும் அடைத்துக்கொண்டு நிற்பதுடன், ஏனைய சிறிய மகிழுந்துகளுடன் ஒபிடுகையில் அதிகளவு மாசடைவையும் வெளியிடுகின்றன என தெரிவிக்கப்பட்டே இந்த கட்டண அதிகரிப்பு கோரப்பட்டிருந்தது.
நேற்றைய வாக்கெடுப்பில் 78,0000 பேர் பங்கேற்றிருந்தனர். அவர்களில் 54.55% சதவீதமானோர் கட்டண உயர்வுக்கு ஆதரவு வாக்குகள் அளித்திருந்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan