Paristamil Navigation Paristamil advert login

கார்-து-லியோன் தாக்குதலாளி மீண்டும் கைது!!

கார்-து-லியோன் தாக்குதலாளி மீண்டும் கைது!!

4 மாசி 2024 ஞாயிறு 17:17 | பார்வைகள் : 11703


கார்-து-லியோனில் கத்திக்குத்துத் தாக்குதல் நடாத்திய குற்றவாளி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளி, மனிநிலைப் பிறழ்வு உள்ளவர் எனவும் விசாரணை நடாத்த முடியாது எனவும் விடுவிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தபட்டு நேற்று இவரது காவல் நிறுத்தப்பட்டிருந்தது.

தாக்குதல் நடாத்திய குற்றவாளியான 32 வயதுடைய மாலியைச் சேர்ந்த இந்த நபர்,  மனிப்பிறழ்வு அற்றவர் எனவும், விசாரணைக்கு உட்படுத்தத் தகுதியான நிலையில் உள்ளார் எனவும், மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் மருத்துவர் உறுதி செய்தமையால், இன்று மாலை 16h00 மணியளவில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரிசின் இரண்டாவது மாவட்டக் காவற்துறையினர் இவரைக் கைது செய்து மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவர் நடாத்திய கத்திக்குத்திற்கு இலக்கான மூவரில் ஒருவரின் நிலைமை இன்னமும் உயிர் ஆபத்தான நிலையிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்