SUVs வாகனங்களுக்கு மூன்று மடங்கு தரிப்பிடக்கட்டணம்?? - இன்று வாக்கெடுப்பு!
4 மாசி 2024 ஞாயிறு 09:29 | பார்வைகள் : 11338
பரிசில் SUVs வாகனங்களுக்கான தரிப்பிட கட்டணம் மூன்று மடங்காக அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரிஸில் வசிக்கும் மக்களிடம் வாக்கெடுப்பு ஒன்று இன்று இடம்பெறுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பரிஸ் மக்கள் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SUVs வாகனங்களில் அதிக இடத்தினை தக்க வைக்கப்பதாகவும், அதிக சுற்றுச்சூழல் மாசடைவை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டு, இதனால் குறித்த வாகனங்களுக்கான தரிப்பிடக்கட்டணம் மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டும் எனும் ஆலோசனையையும் பரிஸ் நகரசபை முன்வைத்தது.
இது தொடர்பான முடிவினை மக்களின் கைகளுக்கே விடப்பட்டுள்ளது. பரிஸ் முழுவதும் 222 வாக்கெடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 1.3 மில்லியன் மக்கள் இதில் வாக்களிக்க ஏற்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan