குடியேற்ற சட்டச் சீர்திருத்தத்துக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம்!!

4 மாசி 2024 ஞாயிறு 07:56 | பார்வைகள் : 9271
குடியேற்ற சட்ட சீர்திருத்தத்துக்கு எதிராக நேற்று சனிக்கிழமை மாலை பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஆவணங்கள் அற்ற வெளிநாட்டவர்கள் இதில் பங்கேற்று, இந்த சீர்திருத்தத்துக்கு எதிராக குரல் எழுப்பினர்.
Elisabeth Borne பிரதமராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட குடியேற்ற சீர்திருத்தத்தினை பிரெஞ்சு அரசமைப்புச் சபை கடந்த ஜனவரி மாத இறுதியில் சில தணிக்கைகளுடன் ஏற்றுக்கொண்டிருந்தது. குடியேற்றவாதிகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்த சட்டத்தினால் குடியேற்றவாதிகள் மிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“அரசமைப்புச் சபை பல தணிக்கைகளை செய்திருந்தது. அது மகிழ்ச்சியான விடயம் தான். ஆனால் ஒட்டுமொத்த சட்ட சீர்திருத்ததும் எங்களுக்கு எதிரானது. வெளிநாட்டவர்கள் பிரான்சின் பொருளாதார நலன்களின் பெரும் பங்கு வகிக்கின்றனர்.” என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பரிசில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 3,400 ஆவணங்களற்ற வெளிநாட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025