வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க உதவிய ChatGPT....
4 மாசி 2024 ஞாயிறு 07:31 | பார்வைகள் : 8420
ரஷ்யாவில் சரியான ஜோடியாக ChatGPTயால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணும் பெண்ணும் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
ChatGPT தொழில் ரீதியாக மக்களுக்கு உதவுகிறது. ஆனால் மக்கள் Dating Appகளிலும் இதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
ரஷ்யாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அங்கு ஒரு ஆன் தனக்கு ஏற்ற பெண்ணை டேட்டிங் செயலியில் கண்டுபிடிக்க ChatGPT உதவியது.
ரஷ்ய செய்தி நிறுவனமான 'RIA Novosti' படி, 23 வயதான software developer Alexander Zhadan, Tinder செயலியில் பொருத்தமான பெண்களை வடிகட்ட ChatGPT மற்றும் பிற AI Bot-களைப் பயன்படுத்தினார்.
அவ்வாறு சுமார் 5000 பெண்களுடன் chat செய்த பிறகு, Karina Imranovna என்ற பெண்ணை AI தனக்கு சரியான பொருத்தமாக அடையாளம் காட்டியதாக அவர் கூறினார்.
அவருக்கான சரியான பொருத்தத்தைக் கண்டுபிடிக்க சுமார் ஒரு வருடம் எடுத்ததாக Zhadan கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அலெக்சாண்டர், நான் எப்படி பேசுவேன், பழகுவேன் என்பது பற்றி நான் ChatGPTயிடம் கூறவில்லை. எனவே முதலில் சில சிக்கல்கள் இருந்தன, ஏனெனில் இந்த திட்டம் எனக்கு தெரியாது.
ஆனால் பின்னர் நான் பேசும் விதத்திற்கேற்ப பெண்களுடன் பழகத் தொடங்கும் அளவுக்கு பயிற்சி அளித்தேன். இந்த AI Bot மோசமான பொருத்தங்களை நீக்கியது.
அலெக்சாண்டர் Chatbot தனது சார்பாக பேசியதாக கூறினார். அதுவே பெண்களுடனான dateகளை நிர்ணயிதத்து, பின்னர் இறுதியாக கரீனாவை காட்டியது.
கரீனாவை சந்தித்த பிறகு இந்த திட்டத்தை நிறுத்தியதாகவும், 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கரீனாவிடம் propose செய்ய Chatgptயே தன்னிடம் கூறியதாகவும், "எங்கள் உறவு சமநிலையானது மற்றும் வலுவானது" என்று அது கணித்ததாக கூறினார்.
அலெக்சாண்டர் தன்னுடன் AI உதவியுடன் தான் பழகுகிறார் என்பதை கரீனா அறிந்திருக்கவில்லை என்றாலும், அதைப் பற்றி அறிந்ததும், அது அவளுக்கு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
இப்போது கரீனாவும் அலெக்சாண்டரும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் ஒருவரையொருவர் சரியான ஜோடியாகக் கருதுகிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan