தொடருந்து நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர் - காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்!!

4 மாசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 11029
நேற்று சனிக்கிழமை காலை Gare de Lyon தொடருந்து நிலையத்தில் வைத்து பயணிகள் மீது ஒருவர் கண்மூடித்தமான தாக்குதல் மேற்கொண்டிருந்தார். பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு விடுவிக்கப்பட்டார்.
தாக்குதலாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், நிலையான ஒரு மனநிலையில் அவர் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரின் விசாரணைகளின் போதும் அவர் உளநல சிகிச்சை மருத்துவர்களால் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
முன்னதாக், நேற்று சனிக்கிழமை காலை 7.30 மணி அளவில் Gare de Lyon தொடருந்து நிலையத்தில் பயணிகள் மீது குறித்த நபர் கத்தி மூலம் தாக்குதல் மேற்கொண்டிருந்தார். அதில் மூவர் காயமடைந்திருந்த நிலையில், அவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025