Fleury-Mérogis சிறைக்கைதி ஒருவர் தப்பி ஓட்டம்!!

3 மாசி 2024 சனி 10:41 | பார்வைகள் : 12557
Fleury-Mérogis சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், அருங்காட்சியகம் ஒன்றை பார்வையிட அழைத்துச் சென்றிருந்த போது தப்பி ஓடியுள்ளார்.
Essonne மாவட்டத்தில் உள்ள குறித்த சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 24 வயதுடைய கைதி ஒருவரே தப்பி ஓடியுள்ளார். நேற்று பெப்ரவரி 2 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை காலை குறித்த சிறைச்சாலையில் இருந்து சில கைதிகள் பரிசில் உள்ள Quai Branly (7 ஆம் வட்டாரம்) அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
அருங்காட்சியகத்தினை பார்வையிட்டுக்கொண்டிருந்தவர்களில் குறித்த கைதி தப்பி ஓடியுள்ளார். அவரைக் காணவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் கண்டறிந்து அவரச சமிக்ஞையை எழுப்பினார்கள்.
பின்னர் தப்பி ஓடிய கைதி தேடப்பட்டு வருகிறார். குறித்த கைதிக்கு 'திருட்டு'ச் சம்பவம் ஒன்றுக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்திலும் இரு கைதிகள் Fleury-Mérogis சிறையில் இருந்து தப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025