பிச்சைக்காரன் போல் வந்தது தனுஷா?
1 மாசி 2024 வியாழன் 15:20 | பார்வைகள் : 10940
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், இயக்குநராகவும உள்ளார். தன்னுடைய 50வது படத்தையும் அவரே இயக்கியுள்ளார். இப்படத்தில் படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷண், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது 51வது படத்தில் நடிகர் தனுஷ் பிஸியாகிவிட்டார். இப்படத்தை சேகர் காமுலா இயக்குகிறார். தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் நடிக்கிறார். அரசியல் கதைகளத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படம், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திரா மாநிலம், திருப்பதி கோயில் அருகே உள்ள அலிபிரி காட் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக 'டி 51' என பெயரிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற படப்பிடிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.சூட்டிங்கின் போது போக்குவரத்து மாற்றம் செய்ததால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் முதல் பொதுமக்கள் வரை ஏராளமானோர் கடும் அதிருப்தியடைந்தனர். படப்பிடிப்பிற்காக மக்களை சிரமப்படுத்துவதா என்றும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், போக்குவரத்து இடையூறு, பக்தர்களின் மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனுஷ் படப்பிடிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி மலையடிவாரத்தில் படம் எடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், தனுஷ் மிகவும் அலங்கோலமான ஆடைகளை அணிந்திருந்தார். அவர் ஒரு யாசகனைப் போல் இருந்தார். அவரைப் பார்த்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் விலகிச் செல்வதும் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan