விவாசாயிகளுடன் பிரதமர் சமாதான பேச்சுவார்த்தை!!
 
                    27 தை 2024 சனி 07:00 | பார்வைகள் : 11237
பிரான்சின் தென்மேற்கு நகரமான Montastruc-de-Salies (Haute-Garonne) இற்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை விஜயம் மேற்கொண்ட பிரதமர் கேப்ரியல் அத்தால், அங்கு விவசாயிகளைச் சந்தித்து அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கடந்த சில நாட்களாக விவசாயிகள் பெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறமை அறிந்ததே. வீதிகளை முடக்குவது, காவல்நிலையங்கள் மீது குப்பைகளைக் கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள், கால்நடை பண்ணையாளர்களது கோபத்தினை தணிப்பதற்காக பிரதமர் கேப்ரியல் அத்தால் சில அறிவித்தல்களை வெளியிட்டார்.
‘உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் அரசு மதிக்கிறது. எஞ்சியுள்ள அனைத்திலும் மேலாக நாங்கள் விவசாயத்தை வைக்க முடிவுசெய்துள்ளோம்!’ என அவர் குறிப்பிட்டார். அத்தோடு சில சலுகைகளையும் அவர் அறிவித்தார். குறிப்பாக ‘எளிமைப்படுத்தப்பட்ட 10 நடவடிக்கைகளை’ பிரதமர் அறிவித்தார்.
விவசாயத்திட்டங்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு நான்கில் இருந்து இரண்டு மாதங்களாக குறைக்கப்படும் எனவும், விவசாயிகளின் கோரிக்கை மிக விரைவாக தீர்கப்படும் எனவும், L’OFFICE FRANÇAIS DE LA BIODIVERSITÉ (OFB) அலுவலகம் காவல்துறையினரால் கண்காணிக்கப்படும் உள்ளிட்ட சில அறிவித்தல்களை வெளியிட்டார்.
L’OFFICE FRANÇAIS DE LA BIODIVERSITÉ என்பது பிரெஞ்சு விவசாயிகள், கால்நடை பண்ணையார்களின் நலன்களுக்காக இயங்கும் ஒரு அமைப்பாகும். அவர்களுடன் விவசாயக் கண்காட்சிக்கு முன்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
அதேவேளை, பிரான்சின் விளை நிலங்களை பாதுகாக்கவும், விவசாயத்தை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட ‘Egalim laws' சட்டத்தினை மிக உறுதியாக செயற்படுத்தி, விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் எனவும் உறுதியளித்தார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan