ஜனாதிபதி மக்ரோனின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!
26 தை 2024 வெள்ளி 14:17 | பார்வைகள் : 18023
விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து செல்கிறது. விதம் விதமாக தங்களது போராட்ட வடிவங்களை நாளுக்கு நாள் மாற்றிக்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு கட்டமாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் வீட்டுக்கு முன்பாக அவர்கள் போராட்டம் மேற்கொள்ள உள்ளனர்.
நாளை சனிக்கிழமை காலை 11 மணி அளவில் e Touquet நகரில் உள்ள ஜனாதிபதி மக்ரோனின் வீட்டுக்கு முன்பாக உழவு இயந்திரங்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். 70 உழவு இயந்திரங்களை வீட்டுக்கு முன்பாக நிறுத்துவதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அதனை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.


























Bons Plans
Annuaire
Scan