இலங்கையில் ஜனவரி மாத பணவீக்கம் 6.5 % வரை உயர்வு!

22 மாசி 2024 வியாழன் 15:50 | பார்வைகள் : 4341
இலங்கையில் பணவீக்கம் 6.5 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
2023 டிசம்பரில் பணவீக்கம், 4.2 சதவீதமாக இருந்ததாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2023 டிசம்பரில் 1.6 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், 2024 ஜனவரியில் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.