துணைவியைக் கொன்று தன்னையும் சுட்ட துணைவன்!!
19 மாசி 2024 திங்கள் 09:13 | பார்வைகள் : 13661
லியோன் நகரின் புறநகரப் பகுதியான வெனிசியூவில் (Vénissieux - Rhône) கடந்த சனிக்கிழமை ஒரு பெண்ணின் உடலத்திற்கருகில் காயங்களுடன் இருந்த ஒரு நபரை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

26 வயதுடைய இந்த நபர், பலத்த காயங்களுடன் கையில் துப்பாக்கியை ஏந்திய வண்ணம் ஒரு தொழிற்சாலையின் முன்றலில் சிற்றுந்நதில் இருந்துள்ளார். அருகில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சாவடைந்த நிலையில் ஒரு பென் கிடந்துள்ளார்.
இது இவரது முன்னாள் துணைவியார் என்றும், இந்த நபர் தொடர்ந்தும் தொடர்பிலேயே இருந்துள்ளார் என்றும் முதற்கட்டத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபரின் சகோதரன், தனக்குக் கிடைத்த ஒரு காணொளியில், கையில் ஆயுதத்துடன் 'நான் தவறு செய்து விட்டேன். தற்செயலாக அவளைக் கொன்று விட்டேன்' எனக் கூறி தன்னையும் சுடும் காட்சியைப் பார்த்து, உடனடியாகக காவற்துறைக்கு வழங்கிய தகவலையடுத்தே காவற்துறையினர் இந்த நபரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி துணைவியைக் கொன்றவரும் சாவடைந்துள்ளார்.
இந்தத் தகவலை இன்று திங்கட்கிழமை வழங்கிய லியோன் நீதியரசர், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan