அஜித்திற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை?

17 மாசி 2024 சனி 13:23 | பார்வைகள் : 5223
நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க அஜித்துடன் இதுவரை இணைந்து நடிக்காத நடிகைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக முதலில் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஒரு வேளை இவரின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் திஷா பதானி உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். கூடிய விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.