3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் வழங்க உறுதி! - பிரான்ஸ் - உக்ரேன் ஜனாதிபதிகள் சந்திப்பு!
.jpeg)
17 மாசி 2024 சனி 08:12 | பார்வைகள் : 13287
நேற்று பெப்ரவரி 16, வெள்ளிகிழமை உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelensky பரிசுக்கு வருகை தந்திருந்தார்.
இரஷ்யாவுடனான யுத்தம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை அண்மித்துள்ள நிலையில், பிரான்ஸ்-உக்ரேன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அவர் பிரான்சுக்கு வருகை தந்திருந்தார். இந்த ஒப்பந்தமானது உக்ரேனின் வசிக்கும் மக்களுக்கும் மற்றும் உக்ரேனின் இராணுவத்துக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கான ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தத்தில் 2024 ஆம் ஆண்டில் 3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்குவதற்கு பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. முன்னதாக 2022 ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் யூரோக்கள், 2023 ஆம் ஆண்டில் 2.1 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025