வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள்
15 மாசி 2024 வியாழன் 13:23 | பார்வைகள் : 14659
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வீசா தொடர்பான மீறல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குழுவையே நாட்டிலிருந்து நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் 25 இலங்கையர்கள், 83 பங்களாதேஷ் பிரஜைகள், 46 இந்திய பிரஜைகள் மற்றும் 08 நேபாள பிரஜைகள் நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan