Airbnb இல் வீடு வாடகைக்கு எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
12 மாசி 2024 திங்கள் 09:51 | பார்வைகள் : 14278
Airbnb தளம் ஊடாக வீடொன்றை வாடகைக்கு பெற்றுக்கொண்ட ஒருவர் அங்கு சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பெப்ரவரி 10, சனிக்கிழமை இச்சம்பவம் Strasbourg (Bas-Rhin) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடொன்றுக்கு குடியேறச் சென்ற ஒருவர், வீட்டின் கதவை திறந்தபோது உள்ளே இருந்து துர்நாற்றம் வருவதைக் கவனித்தார். பின்னர் தேடிப்பார்த்ததில் 40 வயதுடைய ஒருவர் உயிரிழந்து சடலமாக கிடப்பதை பார்த்துள்ளார்.
காவல்துறையினர் அழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த வீட்டில் முன்னதாக வாடகைக்கு வசித்தவர் எனவும், அவர் இயற்கை மரணமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan