புதிய கல்வியமைச்சர் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் திட்டம்!!

10 மாசி 2024 சனி 19:39 | பார்வைகள் : 10250
பிரான்சின் புதிய பிரதமர் கப்ரியல் அத்தாலின் புதிய அமைச்சரவை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் தேசிய கல்வியமைச்சராக நிக்கோல் பெலுபே (Nicole Belloubet) பொறுப்பேற்றுள்ளார். வெறும் 28 நாட்கள் மட்டுமே கல்வியமைச்சராக இருந்த அமெலி உவெதா கஸ்தெரா(Amélie Oudéa-Castéra)இற்குப் பதிலாக நிக்கோல் பெலுபே பொறுப்பேற்றுள்ளார்.
அமெலி உவெதா கஸ்தெரா கல்வியமைச்சராக இருந்த 28 நாட்களிற்குள் ஆசிரயர்கள் பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சட்டத்துறைப் பேராசிரியரான நிக்கோல் பெலுபே 2017 முதல் 2020 வரை நீதிமைச்சராகவும் இருந்துள்ளார்.
தான் பொறுப்பேற்றதும் உடனடியாக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதுடன், தேசியக் கல்வித்துறையின் தரத்தினை உயர்த்த உள்ளதாகவும் இன்று பதவியேற்றவுடன் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025