பிரான்சிடம் மீண்டும் ஆயுத உதவி கோரும் உக்ரேன்!

10 மாசி 2024 சனி 18:21 | பார்வைகள் : 7845
இரஷ்யாவுடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள உக்ரேன், பிரான்சிடம் ஆயுத உதவி கோரியுள்ளது.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை தொலைபேசியூடாக தொடர்புகொண்டு உரையாடிய உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelensky, பிரான்சிடம் இருந்து ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் கோரியுள்ளார். இதனை Volodymyr Zelensky தனது சமூகவலைத்தள கணக்கினூடாக பகிர்ந்திருந்தார்.
அதேவேளை, பிரான்சின் 'அசைக்கமுடியாத ஆதரவுக்கு நன்றி!' எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக எலிசே தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் உறுதியளித்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.
இரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து உக்ரேனுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் பிரான்ஸ், இதுவரை பல முறை ஆயுதங்கள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025