உள்துறை அமைச்சகத்துக்கு முன்பாக வைத்து காவல்துறையினர் மீது தாக்குதல்!!
9 மாசி 2024 வெள்ளி 13:07 | பார்வைகள் : 9940
பரிசில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு முன்பாக வைத்து காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 8 ஆம் வட்டாரத்தில் உள்ள Place Beauvau கட்டிடத்தின் முன்பாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் குறித்த காவல்துறை அதிகாரியின் கழுத்தை நெரித்து தள்ளிக்கொண்டு கட்டிடத்துக்கு உள்ளே நுழைய முற்பட்டார்.
பின்னர் மேலதிக காவல்துறையினர் அழைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 17 ஆம் வட்டார காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கைது செய்யப்படும் போது குறித்த எவ்வித தகவல்களையும் அவர் வெளியிடவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan