விக்ரமுக்கு வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா...
9 மாசி 2024 வெள்ளி 12:11 | பார்வைகள் : 7278
நடிகர் எஸ்ஜே சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவாக நடித்தாலும் கடந்த சில ஆண்டுகளாக அவர் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார் என்பதும், நடிப்பு அரக்கனான அவரது வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததால் அவரை பல பிரபல நடிகர்கள் தங்கள் படத்திற்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு அளித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக மகேஷ் பாபு நடித்த ’ஸ்பைடர்’ விஜய் நடித்த ’மெர்சல்’ ஆகிய படங்களில் வில்லனாக கலக்கிய எஸ் ஜே சூர்யா, தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகருக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் சியான் விக்ரம் நடிக்க இருக்கும் 62 ஆவது திரைப்படத்தை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அருண்குமார் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். அருண்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’சித்தா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் விக்ரமை வைத்து இயக்கும் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தில் தான் தற்போது எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக விக்ரம் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடிப்பது மட்டுமின்றி மோத இருப்பதையும் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan