எல்லையில்லா கண்ணீர் வெள்ளம்
8 மாசி 2024 வியாழன் 10:11 | பார்வைகள் : 8041
என்னுயிரே...
நல்லவை தீயவை
பிரித்து பார்க்க தெரிந்தும்...
எல்லாவற்றிற்கும்
ஆசைப்படும் குழந்தைபோல ...
மழலையாக
ஆசைப்பட்டேன் உன்னையும்...
ஆசைக்கும் எல்லையுண்டு
என்பதை மறந்தேன்...
எல்லையில்லா கண்ணீர்
வெள்ளம் என் கண்களில்...
என் கண்ணீருக்கு சிலர்
காரணமாக ஆயிருக்கலாம்...
நான் யாருடைய
கண்ணீருக்கும்...
இன்றுவரை நான்
காரணமானதில்லை...
இதயத்தின் வலி
கண்களில் கண்ணீராக...
இதயவலியை நான்
யாருக்கும் கொடுத்ததில்லை...
அதுதான்
என் சந்தோசம்...
வலிகளை உணர்ந்த நான்
வலிகளை யாருக்கும் கொடுத்ததில்லை.....


























Bons Plans
Annuaire
Scan