மக்ரோன் தம்பதிகளுக்கு இரண்டு நாய்களை பரிசளித்த கஸகஸ்தான் ஜனாதிபதி!!

7 மாசி 2024 புதன் 10:39 | பார்வைகள் : 12650
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜித் மக்ரோன் கடந்த வருடம் கஸகஸ்தான் (Kazakhstan) சென்றிருந்த போது அவருக்கு இரவு நாய்கள் பரிசளிக்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதி மக்ரோனிடம் Nemo எனும் வளர்ப்பு நாய் இருப்பது அறிந்ததே. தற்போது அதனுடன் மேலும் இரு நாய்கள் இணைந்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் மக்ரோன் தம்பதியினர் கஸ்கஸ்தான் சென்றிருந்தனர். அதன் போது அந்நாட்டு ஜனாதிபதி Kassym-Jomart Tokaïev, மக்ரோன் தம்பதியினருக்கு இரண்டு நாய்களை பரிசளித்தார். Jules மற்றும் Jeanne என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
Tazi greyhounds இனத்தைச் சேர்ந்த நாய்களே பரிசளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியினை Le Parisien ஊடகம் வெளியிட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025