◉ ’ஒட்டுமொத்த இல் து பிரான்சையும் முடக்குவோம்!’ - விவசாயிகள் எச்சரிக்கை!!
24 தை 2024 புதன் 15:29 | பார்வைகள் : 15520
எங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் ஒட்டுமொத்த இல் து பிரான்சையே முடக்குவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது துளிர்விட்டுள்ள விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் கிட்டத்தட்ட 80 மாவட்டங்களுக்கும் மேலாக பரவியுள்ளது. விவசாயிகள் உழவு இயந்திரங்களை வீதிகளில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எங்களது கோரிக்கை தொடர்பில் அரசு மெளனம் சாதித்து வருகிறது என்பதை குறிப்பிட்ட விவசாயிகளுக்கான பிரெஞ்சு சபை (FDSEA), அரசு செவி சாய்க்கவில்லை என்றால் இல் து பிரான்ஸ் மாகணத்தை முடக்குவோம் எனவும் தெரிவித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan