நாடு முழுவதும் பரவும் விவசாயிகள் போராட்டம்! - நாடு முடக்க நிலைக்கு வரும் ஆபத்து!!

24 தை 2024 புதன் 09:46 | பார்வைகள் : 6533
ஒருசில நகரங்களில் ஆரம்பித்த விவசாயிகள் போராட்டம், நாடு முழுவதும் பரவி வருகிறது. கிட்டத்தட்ட 85 மாவட்டங்களில் இந்த போராட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
A64, A65, A63, A10 உள்ளிட்ட பல நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்களது உழவு இயந்திரத்தை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எவ்வாறாயிலும், இல் து பிரான்சுக்குள் பெரிய அளவு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று காலை ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இருவர் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் நாடளாவிய ரீதியில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.