இன்று காலை மீண்டும் உழவு இயந்திரத்துடன் வீதிகளில் இறங்கிய விவசாயிகள்!!

24 தை 2024 புதன் 05:16 | பார்வைகள் : 7016
கடந்த சில நாட்களாக வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், இன்று ஜனவரி 24, புதன்கிழமையும் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.
அதிகாலை 4.30 மணி அளவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது வீதிகளில் இறங்கினர். உழவு இயந்திரத்தை வீதி முழுவதும் நிறைத்து வீதி போக்குவரத்தை தடை செய்தனர். Guéret/Limoges நகரங்களுக்கு இடைப்பட்ட RN145 நெடுஞ்சாலையில் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வீதி தடையை அடுத்து, உள்ளூர் காவல்துறையினர் வாகனசாரதிகளுக்கு மாற்று பாதைகளை அறிவித்துள்ளனர்.
பிரான்சில் விவசாய உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டும் விவசாயிகள், அரசு தங்களை கைவிட்டுள்ளதாக குற்றம் சாட்டி இந்த போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
(புகைப்படம் : நேற்றைய போராட்டத்தின் போது..)