Paristamil Navigation Paristamil advert login

பிரான்சைத் தாக்க வரும் ஜோசலின் புயற்காற்று  !! எச்சரிக்கை!!

பிரான்சைத் தாக்க வரும் ஜோசலின் புயற்காற்று  !! எச்சரிக்கை!!

23 தை 2024 செவ்வாய் 21:19 | பார்வைகள் : 7382


இன்று 23ம் திகதி இரவிலிருந்து நாளை 24ம் திகதிவரை ஜோசலின் புயற்காற்று பிரான்சைத் தாக்க உள்ளது.

இந்த ஜோசலின் புயற்காற்று மணிக்கு 100 கிலோமீற்றரிற்கும் அதிகமான வேகத்தில் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து வானிலை மையத்தினால் இந்தப் புயற்காற்று ஜோசலின் புயற்காற்று எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அத்லாந்திக்கில் உருவான இந்தப் புயல், பிரித்தானியாவிற்கும் ஐஸ்லாந்திற்கும் இடையில், நோர்வே கடலைத் தாண்டி பிரான்சினைக் கடக்க உள்ளது.

இந்தப் புயற்காற்று பிரான்சின் வடக்குப் பகுதியைத் தாக்க உள்ளது. அதன் பின்னர் கொஞ்சம் வேகம் குறைந்து பிரான்சின் கிழக்குப் பகுதியைக் கடக்க உள்ளதாக பிரான்சின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது குறிப்பிட்ட வேகத்தில் இல்-து-பிரான்சினையும் கடக்க உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்