Paristamil Navigation Paristamil advert login

இல் து பிரான்சுக்குள் பல்வேறு விபத்துக்கள் பதிவு! - ஒருவர் பலி, நால்வர் காயம்!

இல் து பிரான்சுக்குள் பல்வேறு விபத்துக்கள் பதிவு! - ஒருவர் பலி, நால்வர் காயம்!

21 தை 2024 ஞாயிறு 14:44 | பார்வைகள் : 7525


இல் து பிரான்சுக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பல்வேறு வீதி விபத்துக்கள் இடம்பெற்றன. இந்த விபத்துக்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

Val d'Oise மாவட்டத்தின் Villiers-Adam மற்றும் Baillet-en-France நகரங்களை இணைக்கும் N104 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தை அடுத்து அங்கு இன்று காலை போக்குவரத்து தடைப்பட்டது. அதிக மழையும், உறை பனியும் வீதியில் நிறைந்து இருந்ததால் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது. 

பரிசை நோக்கி வரும் A13 நெடுஞ்சாலையிலும் விபத்து ஏற்பட்டது. 

Guerville (Yvelines) நகரிநை ஊடறுக்கும் A13 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 60 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இதில் ஐந்து வாகனங்கள் மோதுண்டு விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்