Saint-Denis : தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மூன்று நாட்களின் பின்னர் மரணம்!

20 தை 2024 சனி 18:31 | பார்வைகள் : 10030
மூன்று நாட்களுக்கு முன்னர் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை பலியாகியுள்ளார்.
18 வயதுடைய குறித்த இளைஞன் Saint-Denis நகரில் வசிக்கும் நிலையில், புதன்கிழமை காலை அவர் பயிலும் உயர்கல்வி பாடசாலை ஒன்றின் முன்பாக வைத்து Baseball மட்டையினால் தாக்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் தலையில் படுகாயமடைந்த இளைஞன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை காலை அவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்று ஒருமணிநேரம் கழித்து Basilique de Saint-Denis தொடருந்து நிலையத்தில் வைத்து 14 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025