Villetaneuse : வெதுப்பகத்தில் ஆயுதமுனையில் கொள்ளை!

19 தை 2024 வெள்ளி 14:00 | பார்வைகள் : 11971
Villetaneuse (Seine-Saint-Denis) நகரில் உள்ள வெதுப்பகம் ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், ஆயுத முனையில் கொள்ளையிட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலை 6.20 மணி அளவில் குறித்த வெதுப்பகம் திறக்கப்பட்ட சில நிமிடங்களில் அங்கு நுழைந்த இரு கொள்ளையர்கள், விற்பனையாளரின் தலையில் துப்பாக்கி ஒன்றை வைத்து மிரட்டி, பணப்பெட்டியை சூறையாடியுள்ளார்.
20,000 யூரோக்கள் பணத்தினை கொள்ளையிட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கடந்த சில நாட்களாக இடம்பெற்ற விற்பனை பணத்தை மொத்தமாக கொள்ளையிட்டுக்கொண்டு அவர்க்ள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்றபோதும், வெதுப்பக ஊழியர் உளநல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் SDPJ 93 அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025