Saint-Denis : வாள் வெட்டு தாக்குதலில் சிறுவன் பலி!
 
                    18 தை 2024 வியாழன் 09:06 | பார்வைகள் : 10965
14 வயதுடைய சிறுவன் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். ஜனவரி 17, நேற்று புதன்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Basilique de Saint-Denis தொடருந்து நிலையத்துக்கு அருகே நேற்று மாலை குழு மோதல் ஒன்று இடம்பெற்றது. பதின்ம வயதுடைய சிறுவர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருந்தனர். அதன் போதே குறித்த 14 வயதுடைய சிறுவன் மீது வாள் வெட்டு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மிக துல்லியமான தகவல்கள் வெளியாகவில்லை என்றபோதும், சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என அறிய முடிகிறது.
Saint-Denis நகரம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக இருந்ததாகவும், அருகருகே இருக்கும் இரு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan