கொவிட் காலத்துக்கு முந்தைய போக்குவரத்தை அளவை நெருங்கிய விமான நிலையங்கள்!

17 தை 2024 புதன் 14:14 | பார்வைகள் : 16363
கொவிட் 19 காலத்துக்கு முந்தைய அளவு போக்குவரத்து அளவை சென்ற ஆண்டு பரிஸ் விமான நிலையஙகள் நெருங்கியுள்ளன.
Paris-Charles-de-Gaulle (CDG) மற்றும் Orly சர்வதேச விமான நிலையங்களில் வழியாக 2023 ஆம் ஆண்டு 99.7 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 15.1% சதவீதம் அதிகமாகும்.
எவ்வாறாயினும் இதுவரை அதிக பயணிகள் பயணித்த ஆண்டாக 2019 ஆம் ஆண்டு அமைந்திருந்தது. அதனோடு ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 92% சதவீதத்தை நெருங்கியுள்ளது.
பிரான்சில் சுற்றுலாத்துறை சென்ற ஆண்டு கணிசமான இலாபத்தினைச் சந்தித்திருந்தது. தங்குமிடங்கள், திரையரங்குகளிலும், குளிர்கால மலிவு விற்பனையும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. லூவர் அருங்காட்சியகமும் 2019 ஆம் ஆண்டினை நெருங்கிய பார்வையாளர்களை சென்ற ஆண்டில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025