பரிசில் காணாமல் போன இளைஞரின் சடலம் ஆற்றில் இருந்து மீட்பு!!
.jpg)
16 தை 2024 செவ்வாய் 13:36 | பார்வைகள் : 14711
பரிசில் உள்ள canal Saint-Denis ஆற்றில் இருந்து இளம் நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்குச் சென்றிருந்த இளம் நபர் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. 25 வயதுடைய ஜோசப் என்பவரே காணாமல் போனவராவார். இந்நிலையில், மேற்குறித்த சடலம் அவராக இருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது. இது தொடர்பிலான உண்மைத்தன்மையை அறிய உடற்கூறு பரிசோதனைகளுக்கான சடலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஜோசப் கடந்த ஜனவரி 6 ஆம் திகதி காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்தனர். முந்தைய நாள் இரவில் நண்பர்களுடன் இரவு விடுதியில் மது அருந்திவிட்டு காலையில் வீட்டுக்குத் திரும்புவதாக தெரிவித்து விட்டு அவர் புறப்பட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர்.
ஜோசப் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025