Paristamil Navigation Paristamil advert login

Réunion  தீவில் சூறாவளி - சிவப்பு எச்சரிக்கை!!

Réunion  தீவில் சூறாவளி - சிவப்பு எச்சரிக்கை!!

14 தை 2024 ஞாயிறு 17:24 | பார்வைகள் : 14547


Réunion  தீவில் பலத்த சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்ச எச்சரிக்கையான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிரான்ஸ் நேரம் 8 மணி முதல் (Réunion தீவு நேரம் மாலை 5 மணி) இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 250 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. 

இந்த புயல் வேகம் இதுவரை கண்டிராக இயற்கை பேரழிவாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முன் ஏற்பாடுகள் அங்கு தயாராக இருப்பதாகவும், தீயணைப்பு மற்றும் உதவிக்குழுவினர் தயாராக இருப்பதாகவும் பிரதமர் கேப்ரியல் அத்தால் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

● ”வீட்டில் இருங்கள்!”

Réunion தீவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்குமாறு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 

******

அவசர தொலைபேசி இலக்கங்கள், தங்குமிடம் தேவைப்படுவோர் அழைக்க அவசரகால உதவி மையங்கள் போன்றன உருவாக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்