வாட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய விடயம்

9 கார்த்திகை 2023 வியாழன் 07:09 | பார்வைகள் : 5290
மெட்டா நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப் செயலி பயனாளிகளுக்காக புதிய சேவைகளை பரிசோதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வாட்ஸ்அப்பில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படம் (ப்ரோஃபைல் போட்டோ) வைத்துக் கொள்ள புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு தன்முகப்பு படமும், இல்லாதவர்களுக்கு மாற்று தன்முகப்பு படத்தையும் வைத்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் ஓர் அரணாக இந்த வசதி பார்க்கப்படும் என வாட்ஸ்அப் பீட்டாஇன்ஃபோ இணையதளம் தெரிவித்துள்ளது.
மேலும், வாட்ஸ்அப்பில் பயனர் பெயர் அமைத்துக் கொள்ளும் வசதியும் பரிசோதனை முயற்சியில் உள்ளது.
தற்போது தொலைப்பேசி எண் மட்டுமே வாட்ஸ்அப்பில் ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொள்ள கருவியாகவுள்ள நிலையில், பயனர் பெயர் வசதி மூலமாக பெயரைத் தேடி தொடர்பு கொள்ள இயலும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025